எனது சிறிய ஆசை....

மழை வேண்டும்,
மழையில் ஒழுகாத
குடையொன்றும்
கையில் வேண்டும்,
குடையிருந்தும் நான்
நனைய வேண்டும்,
மழையோடு வெயில்
வேண்டும்,
நனையும்
போதே வெயிலில் நனைய
வேண்டும்,
இவற்றினிடையே
இருளும் வேண்டும்,
இருளிலே நான்
ஒளிய வேண்டும்,
வானவில்லும் வேண்டும்,
காற்றும் வேண்டும்,
வானவில்லின் வண்ணங்கள்
காற்றால் மாற வேண்டும்,
காற்றின் திசையும்
மாற வேண்டும்,
இச்சிறு ஆசையை
நான் அனுபவிக்க
வேண்டும்,
அதற்கு சிலமணி நேரங்கள்
வேண்டும்...!
இவற்றை காண
துணை ஒன்றும்
என்னோடு ேவண்டும்...!

எழுதியவர் : Vijayaragavan (10-Dec-12, 12:13 pm)
சேர்த்தது : ragavanlazy
பார்வை : 111

மேலே