சாபம்...
எதற்காக
உன்னை பார்த்தேன்?
எதற்காக
உன்னிடம் தோற்றேன்?
காதல்
ஒரு சாபமோ எனக்கு...!
எங்கிருந்தோ வந்தவள்
உன்னை
என் உயிராக
நினைத்தேன்.!
நினைவுகள் கொண்டு
நெஞ்சோடு சுமந்தேன்...!
கனவுலகம் வளர்த்து
காவல் செய்தேனே...!
மறந்தாயடி,
நில் என்று சொன்ன
உன் விழிகளும்
என்னை இப்போது
பார்க்க மறுக்கிறதே...!
தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறாயே,
ஏதும் அறியாதவளாய்,
என்னை ஏமாற்றி விட்டு!
ஏன்,காதல்
ஒரு சாபமோ எனக்கு...!?