சொன்னவள் காணவில்லை
ஒரு மாலைப் பொழுதில் வருவேனென்று
ஒரு காலைப் பொழுதில் சொன்னாய்
மாலையும் வந்தது
மாலையும் சென்றது
மங்கை நீ வரவில்லை
மாலையும் நாராய் மாறிப் போனது
மணமோ இன்னும் மறையவில்லை
கவிஎழுதச் சொல்லிக் கேட்டாய்
காகிதங்கள் வாங்கி வந்தேன்
கவி எழுதி முடிக்கு முன்னே
காணாமல் போய்விட்டாய்
உன்னை வைத்து சிலை செய்ய
உளி கூட வாங்கி வந்தேன்
சிலை செதுக்கு முன்னே
சிலையாகிப் போய்விட்டாய்
உள்ளம் அழுவது
உணர்வு தவிப்பது
உனக்கு புரியலையோ
கண்கள் சிவக்குது
கன்னம் வெளுக்குது
காரணம் தெரியலையோ
உயிர் உருகுது
ரத்தம் உறையுது
சத்தம் கேட்கலையோ
உடம்பு துடிக்குது
நரம்பு வெடிக்குது
உண்மை புரியலையோ
நடுநிசிப் பொழுது கூட
நான் உறங்கவில்லை
நாலு வார்த்தை ஆறுதல் சொல்ல
நண்பன் எனக்கில்லை
கவி படித்து கண்மூட
கவிஞரும் உயிருடனில்லை