வானவில்

வானவில்லைக் கொண்டுவந்து
கட்டிப்போட்டவள் அவளல்லவோ
வானவில் அழகென்று சொன்னால்
அது பொய்யல்லவோ

பூங்குழலி அவள் -பூவின் மகள்
பேர் சொன்னாலே சந்தம் வரும்
மணியான நங்கை மரகதத்தின் தங்கை
மனதுக்கு நிம்மதி தானே வரும்

கவிதைகள் படைத்தேன் பரவசம் இல்லை
நாட்டியம் ஆடினேன் நயனங்கள் இல்லை
அவள் பார்க்க கவிதை அழகானது
அவள் சிரிக்க நாட்டியும் உயிர்பெற்றது

சங்கங்கள் அமைத்து பங்கங்கள் அழித்து
அங்கங்கள் முழுதும் அழகுகொழிக்கும் தேவதை
சந்தங்கள் நிறைத்து பந்தங்கள் சேர்த்து
வந்தனங்கள் செய்வது அவளது வாடிக்கை

ஆனந்தம் தந்து ஆறுதல் ஊட்டினாள்
அநாதை எனக்கு அரசசபை காட்டினாள்

அழகான கோயில் அவளுக்கு கட்டுவேன்
அலைவந்து தாலாட்ட வழியும் காட்டுவேன்
வானத்து உடுக்கள் மாடத்து விளக்காகும்
கானகத்து தென்றலில் சுலோகம் மிடுக்காகும் .

உடுக்கள் =நட்சத்திரம்

எழுதியவர் : சுசீந்திரன் (10-Dec-12, 10:06 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
Tanglish : vaanavil
பார்வை : 456

மேலே