பாரத மாதா
என்னை தொலைத்துவிட்டு
என்னை தேட
உன்னை தேடினேன்
உண்மை புரிந்தது
நீயும் தொலைந்து போனாய்.
ஆற்று மணல் மேட்டில் -
அன்று நிலாச் சோறு உண்ணுகையில்-
உங்களுக்கு கவிதை
சொன்னவன் இவன்.
கவிக்கு கைதட்டி
கைகள் புண்ணாகின
கவிஞன் இப்போது
கனவான் வீட்டில்-
கவிஞன் இப்போது
கனமான வீட்டில்-
அவன்கூட்டி
கழித்து பார்த்தான்
கையில் மிஞ்சியது
.அடையாள மை.
அவன் தன் வருத்தத்தை
இப்படிச் சொன்னான்
பருத்தி காட்டுக்கு
விளம்பரம் படுத்துங்கள்
இங்கு தீக்குச்சிகள் உரசப் படும்.
பாரம் கொடுத்தவனை
பாரத்தோடு
பகலிரவாய் தேடுகிறாள்
ஒரு பாவப்பட்ட பெண்-
அவளுக்கு பதினெட்டு
மொழியும்தெரியும்
அவளுக்கு அடையாளம்
மூன்று வண்ணங்கள்.
பாவம் இவள்
விடுதலை அன்றே
விடுதலைக்கு விடுதலைகொடுத்து
வாடுகிறாள் சிறைக் கூடத்தில்.
விலாசத்தை தவறவிட்ட
இவள் மணாளனோ
இன்னும்
வீடு வந்து சேரவில்லை.