தாலாட்டு

வெள்ளி கொலுசு கட்டி
உறங்கும் என் தங்க கட்டி
சின்ன கண்மணியே
சீராளா கண்ணுறங்கு !

வெள்ளி கிண்ணத்துல
வெள்ளை பாலு நனூட்ட
செல்ல கண்மணியே - என்
சீராளா கண்ணுறங்கு!

செவப்பு பொட்டு வச்ச
செவளக்காளை துள்ளி வர
சீர்வரிசை எடுத்துகிட்டு
தாய்மாமன் தான் வருவார்
மல்லிகைப்பூ தொட்டிலிலே
மரிகொழுந்தே கண்ணுறங்கு !

எழுதியவர் : சபரிவேந்தன் கோ (11-Dec-12, 3:50 pm)
சேர்த்தது : sirpyco
பார்வை : 311

மேலே