கரைந்து போகிறேன்

இருக்கட்டும் என்று
என்றோ எழுதிவைத்த
முன்னாள் நண்பர்களின்
முகவரித் தொகுப்பு
ஏதோவொன்றைத் தேடுகையில்
எதேச்சையாய்க் கண்ணில் பட,
தேட வந்ததை மறந்து போகிறேன்!
தேனில் ஊறிய நினைவுகளில்
கரைந்து போகிறேன்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (11-Dec-12, 5:02 pm)
பார்வை : 312

மேலே