காலம்
நிகழ்சிகள் இரண்டுக்கு இடையே
நிகழ்ந்திடும் நேரமே காலம்
அகழ்ந்திதைப் புரிந்து கொண்டாலே
பகலும் இரவும் ஒன்றாகும்.
காலத்தை வீணடித்த மனிதன்
கோலமிழந்த ஒரு மடையன் அதை
மூலதனமாக்கி உழைப்பின் -அறிவு
சூலமென ஒளிரும் காணீர்.
நேரத்தை ஆதாயப் படுத்த வாழ்வில்
நேர்மையும் வளமையும் பெருகும்
சாரத்தை நன்குணர வேண்டும்
நேரத்தை நாம் மதிக்க வேண்டும்.
காலம் நல்ல பதில் சொல்லும் அந்த
காலம் பல கதையும் சொல்லும் -எந்தன்
காலம் வரும் அது வெல்லும் எனப்படும்
காலம் நில்லாத ஒன்றாம்.
ஞாலத்தை அழிப்பதும் காலம் அதன்
ஓலத்தைக் கேட்டு விழிப்பீர் -இழந்த
காலத்திற் கீட்டுகள் இல்லை -மண்ணின்
மேலிதிற் வழக்குகள் இல்லை..