ஒரு கவிதை....
கடவுள்..
தமிழ்...
அறிவு...
சுதந்திரம்...
நேர்மை..
அச்சமின்மை...
பெண் விடுதலைக் குரல்...
கவிதை...
எல்லாவற்றிற்கும்...
மீசையும்...
முண்டாசும்
வரைந்து பார்த்தேன்.
தனியொருவனுக்கு...
உணவில்லையேல்.
ஜகத்தினை அழிப்பவனின்
முகம் வந்தது.
வேடிக்கை பார்க்கையில்...
தனக்கு மிஞ்சித்தான்...
தானமும் தர்மமும்...
என்று படித்தவனும்..
எப்போதும்
என் தட்டைக்
காப்பாற்றிக் கொள்பவனுமான...
என் முகத்தில்...
வெறுப்புடன் விழுந்தது...
பாரதியின் எச்சில்.