கவிதை எழுது
கவிதை எழுதபோறேன்
கவனமாக படிங்க !
கவித வடிக்க போறேன்
கவனமாக பிடிங்க !
இலக்கணம் கற்க வில்லை
இலக்கியமும் படிக்கவில்லை
காதலும் எனக்கு இல்லை
காயமும் எனக்கு இல்லை !
சோம்பலும் எனக்கு இல்லை
தோல்வியும் எனக்கு இல்லை !
அழக பாத்தா பிடிக்கும்
அழுக்க பாத்தா தொடைக்கும் !
கவலை வந்தா கண்ணீர் இல்லை
சந்தோசம் வந்தா துள்ளல் இல்லை
பூமியில எதுவுமே நிலைக்காது !
மாற்றம் மட்டும் நிலையானது .