மழையே நீ!
மழையே நீ
மவுனம் உடைத்ததால்
நீலகிரி மலை
உடைந்து போனது.
மண்ணின்
உயிர்த்துளி
மனிதனையே
தின்றது.
இரவில்
தூங்கியவர்கள்
விழிக்கவேயில்லை
காலையில்...
தூங்கும்போதே
எம் உறவுகள்
ஜீவ சமாதியானார்கள்.
குடியிருப்புகளே
கல்லறை
தோட்டங்களானது.
நிலச்சரிவின்
கோரப்பசியால்
வீதியெல்லாம்
மரண ஓலம்
தாயின்
மடி சுரந்தால்
குழந்தையின்
உயிர் வளர்க்கும்...
வானத்தின்
மடி சுரந்தால்
மண்ணில்
உயிரினத்தை வளர்க்கும்...
மழையே
இப்போது மட்டும் நீ
ஏன் எமனாக
வந்து கரம் நீட்டினாய்?