புது இலக்கண நட்பு

அன்பில் முளைத்து
ஆறுதலில் கலந்து
இதயம்
ஈன்றெடுத்த நட்பு

உயிரில் கலந்து
ஊக்கமளித்த நட்பு

என்றென்றும் எல்லோரையும்
ஏங்க வைக்கும் நட்பு

ஐயமின்றி
ஒற்றுமையாய்
ஓங்கி நிற்கும் நட்பு

ஒளவை அதியமான் போல்
காவியம் படைக்கும் நட்பு எங்கள் நட்பு....

எழுதியவர் : Shakthivel (27-Oct-10, 11:09 am)
சேர்த்தது : shakthivel
பார்வை : 293

மேலே