என் தேவதைக்கு பிறந்தநாள்

என் தேவதைக்கு பிறந்தநாள்
கவிதை எழுத காரணத்தை தேடிய போது
பூக்களிடம் கேட்டேன்
அவள் புன்னகையை பற்றி எழுத சொன்னது ...
காற்றிடம் கேட்டேன்
அவள் கால் அழகை பற்றி எழுத சொன்னது ...
முகிலிடம் கேட்டேன்
அவள் முகத்தை பற்றி எழுத சொன்னது ...
பாரிடம் கேட்டேன்
அவள் பார்வையை பற்றி எழுத சொன்னது ...
பறவையிடம் கேட்டேன்
அவள் பேசும் அழகை பற்றி எழுத சொன்னது ...
கரும்மேகத்திடம் கேட்டேன்
அவள் கண் அழகை பற்றி எழுத சொன்னது ...
கடவுளிடம் கேட்டேன்
அவள் மனதை பற்றி எழுத சொன்னது ...
என் மனதிடம் கேட்டேன்
அவளிடமே கேட்க சொன்னது ….
நான் அவளிடம் கேட்டேன்
நீ எழுதிய வரிகளே போதும் என்று புன்னகையுடன் சொன்னால் ......

எழுதியவர் : பாஷா ஜமீல் (14-Dec-12, 1:28 am)
சேர்த்தது : பாஷா ஜமீல்
பார்வை : 273

மேலே