மஞ்சள் பூசிய மான்கள் !

அவள் தடுமாறி
விழுந்து விடுவாளோ என,
நான் நகர்ந்து நிற்கையில்,
எங்கே நான் விழுந்து
விடுவேனென அஞ்சி,
"பாத்துங்க" என உதிர்த்து
விரைந்து பறந்தது
அம்மஞ்சள் கிளி !

அவளும் விழவில்லை
நானும் விழவில்லை - எனினும்
விழுந்ததாய் உணர்கிறேன்
விழுந்ததை உணர்கிறேன் !
எழத்தான் மனமில்லை !

மஞ்சள் பூசிய
மான்கள் அழகு !

எழுதியவர் : வினோதன் (14-Dec-12, 12:34 am)
பார்வை : 176

மேலே