அழகு நிலா ..

அழகு நிலா அழுகிறது
அதட்டலுக்கு ஆளில்லை
வானத்தில் எத்தனையோ
வகைவகையான நட்சத்திரங்கள்


வரிசையாய் வந்தன
சமாதான ஒளியை பரப்பின
ஏனோ கோபம்
எத்திசையும் பிரகாசம்


ஏந்திய விளக்கைப்போல்
ஒளிமயமான கோலம்
அழகுநிலா அழுவதேன்
ஆராத்துயரம் கொண்டதேன்


அழுகையால் வந்தது
கண்ணீர் கண்ணீர்
பூமியில் நிறைந்தது
குளிர் தரும் தண்ணீர்


அழுகையால் தேய்ந்தது
அம்மாவாசையாய் ஆனது
என்ன நேர்ந்ததோ
மேகத்தின் நிழல்பட்டதும்


வெட்கத்தால் சிரித்தது
புன்னகை பூ பூத்தது
வெண்ணிற வெளிச்சம் வீசியது
பௌர்ணமியாய் ஒளி வீசியது


அழகு நிலா அதிசய நிலா
ஆண்டவனால் கிடைத்த பலா ...

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (14-Dec-12, 3:20 pm)
சேர்த்தது : r.mohanasundari
பார்வை : 250

மேலே