தமிழ்
உயிர்த்தமிழே
உன்னை பெண்ணென்றே
உருவகப்படுத்திக்கொண்டேன்...!
தமிழமுதத்தை
எனக்களித்து
தாலாட்டில் தாயானாய்...!
தமிழில் தட்டுத்தடுமாறி
தவழ்ந்த என்னை
உன் கரம்கொடுத்து
நடை பயிலவைத்ததால்
சகோதரியானாய்...!
நடமாட தெரிந்தபின்னே
என்னுள்ளும் உரையாடி
பலகோடி மைல்களுக்கப்பால்
மிகவிரைவாய் நான் ஓட
வழிசெய்து எனக்கானதொரு
சரியான இடத்தை
பரிசளித்து தோழியானாய்...!
உன்னையே சுவாசிப்பதால்
பலரால் வாசிக்கப்பட வைத்தாய்
உன் மீதான கட்டுக்கடங்கா
என் ஒருதலை காதலும்
இன்று கைக்கூட
இருகரம் பற்றிக் கொள்ளவா
என்னுயிர் காதலியாய்...!
ராதை கடவுளை மணமுடிக்கும்போது
உலகாளும் இறைவியே
நான் உன்னை மணம்கொள்ள முடியாதா...?
இறவா தமிழாய் நீ
இறக்கும்வரை தமிழனாய் நான்
இது போதும் நமக்கான சாதக பொருத்தம்
இப்போது நீ சொல்
எப்போது என் மனைவியாவாய்...?