மாவீரா

போராட்டம் என்பதே
பொதுவான விசயமென்று போனபின்னே
எல்லா தோல்விகளையும்
தவிர்த்துவிட முடிவதில்லை...
ஏற்பட்ட தோல்விகளால்
ஒருபோதும் ஓரினம்கொண்ட லட்சியம்
தவிடுபொடி ஆகிவிட போவதுமில்லை...!


_____________________


முட்கம்பி வேலிகட்களுக்குள்ளும்
சுவாசிக்க விருப்பமில்லை
காற்றுக்குள் உன் பிணவாடை...!


_____________________


ஊருக்கு வெளியே சுடுகாடு
என்ற காலம் மாறி
ஊரே சுடுகாடாய் ஆனபின்னே
ஆறடி நிலம்கூட இல்லாமல்
அடித்துவிரட்டபட்டு
நாடுவிட்டு நாடோடிகளாய்
இன்று தமிழர்கள் அகதிகளாய்
சுடுகாட்டிற்குள்...!
_____________________




ஒட்டுமொத்தமாய் தமிழனை
உயிரோடு புதைக்கப்பட்ட இடத்தில்
ஒய்யாரமாய் உருவெடுத்து நிற்கிறது
விகரமான விகார்...!


_____________________


நெஞ்சில் விதைக்கப்பட்ட விதைகள்
முளைக்க தொடங்கும்போது
பல விதிகள் இங்கே
மாற்றி எழுதப்படும் - அன்று
ஈழ தமிழனின் தலைவிதியும் முற்றாய்
திருத்தி எழுதப்படும்...!


_____________________


உன்னை மறக்கநினைக்கும்
மரத்துப்போன மனங்களை
உளுத்துப்போன வார்த்தைகளால்
என்னால் மன்றாட பிடிக்கவில்லை...
நீ கண்ட கனவு வீணாகபோகாது
நிச்சயமொரு நாள் ஈழம் மலராமல் போகாது
நிம்மதியாய் நீ உறங்கு
சுததந்திர ஈழத்தில் தமிழ் தேசியகீதத்தோடு
உன்னுறக்கம் நான் களைவேன்
அதுவரை உன் ஆன்மா ஈழத்திலே
சுழன்று கிடக்கட்டும் மாவீரா...!
_____________________

எழுதியவர் : ச.இமலாதித்தன் (27-Oct-10, 11:52 am)
சேர்த்தது : emalathithan
பார்வை : 456

மேலே