ஜனநாயக ஆசியம்
தன்னுள்ளே தவறென்று
இனம்காட்டும் உள்ளத்தை
இடைமறித்து கொன்றாலும்
வருடத்திற்கு ஒருமுறையென்று
இடை சொருகளாய் வந்துசெல்லும்
இடைத்தேர்தல்களில்
பணம் வாங்கி வாக்களிப்பதை
மன்றாடி எதிர்த்து பார்த்து
மரணித்தே போய்விடுகிறது
மறத்து போன மனசாட்சி...!
என் வீட்டில் மூன்றென்று
ஒன்றுக்கு நூறென்று
மொத்தமாய் முந்நூறை
முன்பணமாய் விலைபேசி
தன்வாக்கு தலைவனுக்கேயென்று
பசும்பாலில் கைவைத்து
சத்தியமும் செய்வித்து
வாக்களிக்கும் வாக்காளனால்
ஆசியமாய் போனது ஜனநாயகம்...!