மகளிர் மட்டும் - கே.எஸ்.கலை

வணக்கம் தோழர்களே....

எழுத்து குடும்ப படைப்பாளிகளின் கூட்டு முயற்சியில் அண்மையில் “யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்” என்ற நூல் பெருமையுடன் வெளியிடப் பட்டமை தாங்கள் அனைவரும் அறிந்ததே.

நூல் வெளியீட்டு செயற்பாட்டில் அடுத்தப் படியாக பெண் படைப்பாளிகளின் தொகுப்பு வெளிவர இருக்கும் செய்தி ஏற்கனவே மதிப்பிற்குரிய தோழர் அகன் அவர்களால் தளத்தில் அறிவிக்கப் பட்டிருந்தமை தெரிந்ததே....

இது பற்றி ஆர்வம் உள்ள பெண் படைப்பாளிகள் தமது மிகச் சிறந்த கவிதைகளை அனுப்புவீர்கள் என்று எதிர்ப் பார்க்கிறோம்....

குறைந்தது ஐந்து படைப்புக்கள் அனுப்ப வேண்டும் என்பது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்...
ஐந்துக்கு மேற்பட்ட கவிதைகள் அனுப்பலாம்...

அனுப்பப்படும் கவிதைகள் நூல் வெளியீட்டு குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு மிகச் சிறந்த கவிதைகள் புத்தகத்திற்காக உள்வாங்கப்படும்...

மேலும் முக்கியமாக ஒரு விடயத்தினை இங்கே குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்....

இந்த நூல் முழுக்க முழுக்க பெண் படைப்பாளிகளின் ஆக்கங்களால் வெளிவர இருப்பதால் தயவு செய்து பெண்கள் பெயரில் இயங்கும் ஆண்கள் இங்கே பங்கேற்க வேண்டாம் என்று அக்கறையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

உதாரணமாக தளத்தில் இருந்த முன்னாள் படைப்பாளியான “ புதுவை காயத்ரி” எனும் பெயர் பலரால் பெண் படைப்பாளி என கணிப்பிடப்பட்டிருந்தாலும் ஈற்றில் அவர் பெண்ணல்ல ஆண் என்பதை அறிந்தோம்....

இது போன்ற சந்தேகத்துக்குரிய பெயர்களால் சர்ச்சைகள் உருவாகக் கூடாது என்பது அன்பு கட்டளை !

இந்த படைப்பில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ள பெண் படைப்பாளிகள் இயன்றளவு விரைவாக தமது இசைவினை எமக்கு அறிவிக்கவும்.
விடுகை மூலம் அல்லது இந்த படைப்பின் கருத்துப் பதிவில் கூறலாம் !

இது ஒரு கூட்டு முயற்சி யாரும் வந்து கைகோர்க்கலாம் !

♥♥பூக்கட்டும் இந்த குளத்தில் இன்னும் பல தாமரைகள்♥♥

எழுதியவர் : கே.எஸ்.கலை (15-Dec-12, 6:08 pm)
பார்வை : 220

மேலே