அவள் ........

கடிதம் சமர்பிக்க வந்த தபால்காரரிடம்
என் முகவரி சொன்ன என் ஊர் மக்கள் இதோ ..........

ஒ! வாழத் தெரியாதவன் வீடா ?
அது நாலாவது வீதியில் இருக்கிறது என்றார் முதியவர் ஒருவர் ............

வீதியில் குழம்ப மீண்டும்
ஒருவரிடம் வினவினார் தபால்காரர்
என் முகவரியைக் காட்டி ............

அதற்க்கு அவர் அளித்த பதில்
எதற்கும் ஆகாதவன் வீடு
எதிர் வீதியில் உள்ளது என்றார் !

எதிர் சந்து வீதி எதுவென்று தெரியாமல்
எதிர்பட்ட நபரிடம் மீண்டும் கேட்டார் தபால்காரர்
என் விலாசம் எதுவென்று ?


ஏமாறப் பிறந்தவன் வீடு
இந்த வீதியில் இல்லையே! என்று
எதார்த்தமாக சொல்லிச் சென்றார் !

சரியான வீதி தெரியாமல் சோர்ந்து போன தபால்காரர் ........
சேர்ந்து வந்த இருவரிடம் மீண்டும் கேட்டார் என் முகவரியை காட்டி ........

அதற்க்கு அவர்கள் இருவரும்
சேர்ந்து சொன்ன பதில்
மூளை இல்லாதவன் வீடு
அடுத்த மூலையில் உள்ளதென்று .........

இப்படியாக .........

பிழைக்கத்தெரியாதவன் வீடு .........
படிக்கத்தேரியாதவன் வீடு ............
ராசியில்லாதவன் வீடு ..............

ரசனை இல்லாதவன் வீடு .............
ரசிக்கத்தெரியாதவன் வீடு .................
சிரிக்கத்தேரியாதவன் வீடு ...................

வீணாய் போனவன் வீடு ...............
விளங்காமல் போனவன் வீடு ............
வேலைக்குப் போகாதவன் வீடு ............

என்று பலரும் என் முகவரி சொல்ல
இறுதியாக வந்து சேர்ந்தார்
ஒரு வீட்டிற்கு ...........

அங்கு அமர்திருந்த பெண்மணியிடம்
இறுதியாக என் முகவரி கேட்க
அவள் உதிர்த்த வார்த்தைகள் இதோ!

அப்பா! தங்கம் ! உன்னப் பார்க்க
தபால்காரர் வந்திருக்காருடா
பவுனு! என்றாள்!

ஆச்சர்யமான அரசு ஊழியர்
அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து
நீங்க ராஜேஷ்க்கு என்ன வேண்டும் என்றார்?

அதற்க்கு பாசத்துடன் அவள் சொன்ன பதில் !
அவன் என் மகன் தானுங்க
என்று!

(வியர்வை மழையில் நனைந்திருந்த அவருக்கு
ஒரு குவளை மோர் கொடுத்தவாறே .........)

தபால்காரரின் தொண்டையின் வறட்சி
ஒரு குவளை மோரால் விலகியது

ஒரு தாயின் பாசம் எப்படிஇருக்கும் என்று
என் அம்மா கூறிய வார்த்தை
அவருக்கு விளக்கியது !!!!!!!!!!!!!!!!

(இது ஒரு உண்மை நிகழ்வு இந்த கவிதையை என்
அன்னைக்கு சமர்ப்பிக்கிறேன் .......................)

எழுதியவர் : ப.ராஜேஷ் (15-Dec-12, 7:01 pm)
Tanglish : aval
பார்வை : 390

மேலே