செத்துப் போகிறேன் இன்றே
கத்தி வீசினாள் கண்ணால்
செத்து மடிகிறேன் பெண்ணால்
கொத்துக்காகிதம் போல என்னையேன்
அள்ளி எறிந்து விட்டுச் சென்றாள்
விட்டுப் போகிறேன் என்றாய்
செத்துப் போகிறேன் என்றாய்
இரண்டின் அர்த்தமும் ஒன்றே
செத்துப் போகிறேன் இன்றே
காதல் என்பதோர் சாபம்
ஆண்கள் மட்டுமே பாவம்
நுனியில் ஆடிடும் பனியாய்
உதிரப்போகிறேன் தனியாய்
மௌனமாய் கரைகிறேன்
மனதிலே நீயடி
தூரமாய்த் தொலைகிறேன்
தூக்கிநீ வீசடி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
