!!!வேலியே பயிரை மேய்ந்தாற்போல்!!!

படியில் பயணம் நொடியில் மரணம்
பள்ளிச் செல்லும் பத்துக் கிராம
பிள்ளைகள் யேறும் எட்டுமணிப் பேருந்தில்
பக்குவமாய் எழுதிய எண்ணத்தின் ஓட்டம் (...)

குற்றவாளியை கைது செய்யும் காக்கிச்சட்டை
குடுமியோ கைதியின் கைப்பைக்குள் அடக்கம்,
திரட்சித்தொகை திரட்டாதே என முழங்கி
திரவியம் தேடும் உயர்மட்ட அதிகாரிகள்(...)

மெய்யின் எதிர்பதத்தை மொய்க்காக சோடித்து
நீதிக்காய் வாதாடும் கருப்புவங்கி மனிதன் ,
சாதியினம் யொழிய சமத்துவம் பேசும்
வீதிக்கொரு சாதிக் கட்சித் தலைவர்கள் (...)

மனிதம் தழைக்க சமாதான கொடியேந்தும்
சமாதான புறாக்களாய் மதக் குருக்கள்
காணிக்கை வாங்கி ஏழைக்கு சோறுதரும்
ஆலயமணி ஓசையில் உறங்கும் கடவுள் (...)

எழுதியவர் : ப்ரியாராம் (16-Dec-12, 11:54 am)
பார்வை : 236

மேலே