உயிருக்குள் ஓர் குரல் ......!

எல்லாம்
என்னால் தானே
என்று முனகலுடன்
என்னை நானே நிந்தித்தேன்

விளையாட்டில்
விருப்பங்கள் கூடிய விதி...,
யாரையும் தனியாகவா விடும்..?
யாதும் அதுவாகியே தொடரும்...!

இப்போது
இயல்பாய் புரிந்ததெனக்கு...,
இனிமேல் உணர்ந்திடுவேன்
இலக்கணங்கள் மரித்த வாழ்வு...!

ஆனது
ஆகட்டும் எல்லாம் - இனி
ஆறுதலோடு என் வழியில்...,
ஆவதென்ன என்றே நடைபழகி

குழந்தையாய்
குணங்கள் புதியதாய்
வகுத்துக் கொண்டபடி...,
வல்லவனின் வாஞ்சைப்படி

வாழ்ந்துவிட
வாகை சூடிக்கொள்ள...,
வலிகள் படர்ந்த தடத்தில்
வலிந்து பயணம் தொடர்ந்தேன்...!

ஒருநாள்
ஓர் நொடியில்....,
காலன் என் வாசலில்
காணவந்தான் ஓலையோடு....!

பிறகென்ன
பிரிந்தேன் உடலை...,
தயாரானேன் மீண்டுமொரு
தடையில்லாப் பயணத்திற்கு...!

எழுதியவர் : புலமி (16-Dec-12, 5:24 pm)
பார்வை : 147

மேலே