...........தொடருமே தொல்லை..........

நீ புறந்தள்ளிய நினைவை அகந்தள்ள இயலாமல்,
பிணந்தின்னிக்கழுகாகி கொத்துகிறேன் அத்துமீறி,
சித்தம் சிறைப்பட்ட சுற்றியலைந்த பொழுதுகளை,
நீ போனாய் நம்பமுடியாதபடி நங்கூரமடித்து,
நானானேன் தங்கயியலாதபடி உள்ளுக்குள் வெடித்து,
விண்ணகம் சென்றுவிடுவேன் ஆனால் !!
அங்கும் காத்திருக்குமே மதிகெட்ட பேய் மனது,
தங்காமல் வருவாய் ஆரவாரமுடன் அருகேயென்று.........

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (16-Dec-12, 7:44 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 80

மேலே