காதலிப்பது பாவம் என்று ....................

காயங்கள் தாங்கிவிடேன்
காதலையும் சுமந்துவிடேன்
கன்னியவள் காத்திருக்க
காதலுடன் சென்றுவிடேன்
காதலித்த நொடிபொழுதில்
கண்ணீரையும் பார்த்து விடேன்
காதலித்த பாவத்துக்காய்
காதலையும் இழந்துவிடேன்
நடந்து வந்த தெருக்கள் எல்லாம்
கேலியுடன் சிரித்திடவே
ஆகி விட்டேன் பைத்தியமாய்
பாவை உன்னை பார்த்ததனால்
அறிந்து விட்டேன் ஒரு நொடியில்
காதலிப்பது பாவம் என்று ....................

எழுதியவர் : க .வினுஜன் (19-Dec-12, 9:52 pm)
பார்வை : 156

மேலே