இருக்கிறது..

ஒவ்வொரு இழப்பும்
தருகிறது
யாருக்கோ ஒரு வலியை !

ஒவொரு பூ மலரும் போதும்
செடி
சிரித்துக்கொள்கிறது !

ஒவ்வொரு சிரிப்புக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது
ஒரு கள்ளம்..!

ஒவ்வொரு காசுக்குள்ளும்
புதைந்திருக்கிறது ..
ஒரு வியர்வைத்துளி!

ஒவ்வொரு மனதுக்குள்ளும்
இருக்கிறது
ஒரு ஆசை!

வெளிச்சத்தை விதைக்கும்போது
அழுகிறது
மெழுகுவர்த்தி!

விளக்கை ஏற்றினாலும்
எரிந்துதான் போகிறது
தீக்குச்சி!

இருப்பு என்பது

பிறப்பிலும் இருக்கிறது..
இறப்பிலும் இருக்கிறது..
இடம் மாறலாம்..
நிறம் மாறலாம்..

ஆனாலும் ..
இருந்துகொண்டே இருக்கிறது......
நிலையாக..!

எழுதியவர் : ந.ஜெயபாலன், திருநெல்வேலி ந (19-Dec-12, 10:01 pm)
பார்வை : 97

மேலே