ப்ரியமுடன்....

நெஞ்சம் சுமக்கும் நினைவுகள்....
உன் நினைவு அலைகளாய்
நித்தமும் நேசிக்கும்
உன்னவள் நிமிடத்திருக்கு
ஒரு முறை திறக்கும்
உன் கண் இமை.....
நித்தமும் திறக்க
மறுபதேன் உன் மனதினை?
உன் அன்பிற்காக ஏங்கி ஏங்கி
சலனமும் போச்சு
உன்னிடம் இருந்து வருவதாக தெரியவில்லை
சமரச பேச்சு ,
கவிதை எழுதி எழுதி
காகிதமும் போச்சு !
என் நீ மட்டும்
என்னோடு இணைய மறுக்கிறாய்?
உன் நிவைவாய் மாற,
உன் உயிராய் இருக்க,
என் உயிரை விடவா?
நிலவை தொடாத வனமாய்
என்னை விட்டு விடாதே....!
பல நதிகளை தாங்கும் கடல் கூட
சிறு கல்லை தங்குவதில்லை!
அது போல தான்
நீ சொல்லும் சொல்லில்
உள்ளதடி என் உயிர்......
ப்ரியமுடன்......!