maranam
காதல் என்ற உன் வார்த்தையால்
இன்று ஒவ்வொரு நொடியும்
எனக்கு நரகமாக நகருகிறது !
என் இதயம் துடிப்பதே
எனக்கு பாரமாக இருக்கிறது
இறந்து விடு என்று என் இதயம்
சொல்லிக்கொண்டே துடிக்கிறது !
வாழவும் முடியாமல் மண்ணோடு
மண்ணாக வீழவும் முடியாமல்
நரகமாக நொடிகள் என்னை கடத்துக்கொண்டிருக்கிறது
உன் வார்த்தையின் வழிகளை
சுமக்கும் இவள் இதயம்
காதல் என்னும் சொர்க்கம் கலந்த
நரகத்துக்குள் துடிக்குகும் துடிப்பையும்
வேதனையும் இவள் மட்டுமே அறிவாள்!
இன்று உனக்கு நான் பாரமாக தோன்றலாம்
என் காதலை புரிந்து கொள்வாயோ !
புரிந்து கொள்ளாமல் போவாயோ
உன் நினைவுகளுடன் துடிக்கும்
என் இதயத் துடிப்பு நின்ற அந்த
நொடியாவது -நீ
புரிந்து கொள் -உன்
ஒருவனை தவிர இவள்
இதயத்தில் யாரும் இல்லை என்று !
உன்னை சேரவே எனக்கு இப்பிறவி !
இல்லையேல் மண்ணோடு மண்ணாக
உன் நினைவுகளுடன் புதைவேன் !
நம் காதல் நினைவுகளுடன் மறைவேன்
உன்னவளாக !!!
உன்னை மறக்கும் அந்த நொடி
இவள் மரணம் !!!!!