திருநாள் காதல்
திருநாள் ஒன்றில் அவளைப் பார்த்தேன்
மறு நாள் பேருந்தில் மீண்டும் கண்டேன்
வரு நாளில் அவள் வருவாளா என்றே
உருகிய எண்ணம் வீன் போகவில்லை.
வந்தவள் பார்த்தாள் இதழ்கடையோரம்
சந்தனச் சிரிப்பை சிறகாய் விரித்தாள்
பந்துபோற் துள்ளி வந்தது காதல்
விந்தையது எனக்கு வாடிக்கை அல்ல.
மூன்று தினங்கள் இப்படியே போய்
ஊண்றிய காதலை சொல்லிட எண்ணி
தூண்டில் பொட்டுப் பிடிக்க நினைந்தேன்
தாண்டி அவள் முன் சென்று நின்றேன்.
மன்னிக்க வேண்டுகிறேன் பெயர் அறியாமல்
மண்டைக்குல் ஏதொ இனம் தெரியா வலி
சொல்லுங்கள் தங்கள் அழகிய பெரை
வெல்லுங்கள் எனது அன்பினை என்றேன்.
சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் வங்க
காப்பீடு ஏதும் எடுத்தாச்சா நீங்க
முகமெலாம் மலர்ந்து கேட்ட அப்பெண்
முகவராம் காப்பீடு நிறுவன மொன்றில்.
காதல் எனக்கு வந்ததைக் கூறி நான்
பாதிப் பயித்தியம் ஆனதைச் சொல்ல
வாதம் ஏதும் செய்திட வேண்டாம் என
நாதனின் தாலியைக் கண்களில் ஒற்றினாள்.