இருக்கும்...

கொஞ்சி விளையாட
நெஞ்சை அள்ளும்
பூநிறைப் பூஞ்சோலை..

பசிக்குக் புசிக்க
பழுத்துக் கிடக்கும்
பலவகைப் பழங்கள்...

தெப்பம் கட்டி
குளித்து மகிழ
வற்றா நீர்ச்சுனைகள்...

நுரைக்கும் ஈரல்
நுரைக்கும் வரைக்கும்
கலப்படமில்லாக் காற்று...

காண்பவர் எல்லாம்
கண்டதும் காட்டும்
நேசப் புன்னகை...

சதிகள் செய்யும் சாதிகள்,
மனிதம் மறக்கும்
மதங்கள் இல்லை

வாழ்வறுக்கும் வன்முறை,
போர்க்குணம் கொண்ட
பேரரசும் இல்லை...

பகைவளர்க்கும் போட்டிகள்
மனதைக் கெடுக்கும்
பொறாமை இல்லை...

நாட்டு மக்கள்
அனைவரும் ஒரே
நண்பர் குழாம்...

எல்லோரும் நல்லவரே
எல்லோரும் வல்லவரே
என்றிருக்கும் நிலை...

இவை எல்லாம்
நிறைந்திருக்கும்
என்... கனவு தேசம்!!

எழுதியவர் : சூரிய விழி (21-Dec-12, 2:47 pm)
Tanglish : irukkum
பார்வை : 131

மேலே