வானம் வந்து விழுகிறதே
வானத்திலிருந்து
இடி வந்து விழ
தாங்க முடிவதில்லை
வானமே வந்து விழுகிறதே..!
பூமி சுழல
நாட்கள் நகரும்
நீ நகர
பிரபஞ்சமே சுழல்கிறதே..!
வாழ்கையில்
சந்தர்ப்பங்கள் நழுவிப் போகலாம்
வாழ்கையே நழுவிப் போனால்.....
என் உயிருக்கு
உன் மூச்சுக் காற்று தானே
பிராண வாயு
மற்றவையெல்லாம்
விசவாயு..!
பக்கம் பக்கமாய்
பாகம் பாகமாய்
கழிவது வாழ்கை.!
நம் வாழ்கையில்
எந்தப் பாகத்தை
நான் கழிப்பது..?
என் உயிருக்கு
நீ தான் உருவம்
உன் உயிருக்கு
நானெப்படி அருவமானேன்.?
உன் உயிரையே
கேட்டுப் பார்..
என்னுயிர்
உன்னுயிருக்கு
ஒப்பாமல் போகுமா?