..........நோக்காடு............
காய்ச்சல் கட்டுப்படாத அளவுக்கு,
மார்கழி குளிரின் தாக்கமும்,
அவள் பேச்சில் வெளிப்படும் பாய்ச்சலும்,
காரணமறிந்து நொந்துபோனவனிடம் வந்து பேசியவள்,
சுடுதண்ணீரில் கவிழ்ந்து போர்வை போர்த்தி,
நன்றாக ஆவி பிடிக்கச்சொன்னாள்,
தளர்ந்துபோனவன் உளறியேவிட்டேன் தாளாமல்,
பேய் பிடித்தவன் ஆவிபிடிக்க முடியுமா ?
அதற்கு அம்மணி முறைத்தமுறைப்பு !
எகிறச்செய்தது நூற்றிரெண்டு டிகிரியையும் !!