நேசம்
நேசத்திற்கு ஒரு வாசம் உண்டு,
தேசங்கள் பல சென்றாலும்
ஆண்டுகள் பல கடந்தாலும்
மனதில் ஒரு பசுமை உண்டு!
நேசத்திற்கு ஒரு வாசம் உண்டு,
எத்தனையோ சோகங்கள்
எத்தனையோ மகிழ்ச்சிகள்
எத்தனையோ யுகங்கள் கடந்தாலும்!
நேசத்திற்கு ஒரு வாசம் உண்டு,
மனிதர்கள் பலரைச் சந்தித்தாலும்
மனதில் பலவற்றைச் சிந்தித்தாலும்
ஆழமான நினைவொன்று என்றும் உண்டு!
நேசத்திற்கு ஒரு வாசம் உண்டு,
பாசத்திற்கு ஒரு வேலி உண்டு,
ஏக்கம் என் நெஞ்சில் உண்டு - அதன்
தாக்கம் என்றும் மனதில் உண்டு!