தெய்வத்தின் பரிசு தாய்
அன்னை என்ற சொல்லுக்கு
ஆயிரம் அர்த்தங்கள் ......
இனிய பத்து மாதங்கள் நம்மை சுமந்து
ஈன்ற அந்த அழகிய தெய்வம்.....
உயர்வான எண்ணங்களை நமக்கு
ஊட்டிய அந்த பெண் சிங்கம்......
என்றும் நம்மை தொடர்ந்து வரும் நிழலைப்போல
ஏற்றத்தாழ்வுகளை தாங்க கற்று தந்தவள்....
ஐம்பொறிகளையும் நமக்காக அடக்கி வாழ்ந்தவள்
ஒன்றாய் வாழ பழகி கொடுத்தவள்
ஓங்கி வளர்ந்த மரத்தின் கிளைகள் போல அவளுக்கு எத்தனை துன்பங்கள் வந்தாலும்
நமக்காக பொருத்துக்கொண்டவல்.....
ஔவைக்கு அதியமான் கொடுத்த அத்தி பழத்தைப் போல, நமக்கு இவ்வுலகில் உயிரை கொடுக்க ஒரு தெய்வம் தான் நம் தாய்...
எவ்வளவு நன்றிகள் கூறினாலும் அவள் தியாகத்துக்கு எதும் ஈடாகாது.........