இது...அது...எது....?

மலைகளிடையே
மல்யுத்தம் .....
தன்னில் பதிந்த முதலடி
யாருடையது என்று...?

மலர்க்கொத்தில் மனப் புயல்
தங்களில் எந்தப் பூவில்
தேனீ முதல் முத்தம்
பதித்தது என்று...?

கடலலைகள் மத்தியில் கலவரம்
எந்த அலை தோன்றியது
முதன் முதலில் என்று...?

கவிதைக்குள் கடுங்குழப்பம்
எந்த வரியின் எந்த எழுத்தால்
ஏற்றம் பெற்றது கரு என்று...?

காலம் மொழிந்தது இப்படி.....,
எந்தக் கால்
இன்றும் உள்ளதோ.
அதுவே...!!!
எந்தத் தேனீ
முத்தப் பதிவை நிறுத்தியுள்ளதோ
அதுவே...!!
எந்த அலை மீண்டு வரவில்லையோ
அதுவே...!!!
எந்த எழுத்தை
மொழி நீக்கிவிட்டதோ
அதுவே....!!!

கவிஞனுக்கு புரியாத புதிர்
கருத்துக்களில் எந்த கருத்து
சத்தியத்தின் கழிவு என்று...?

காலம் மொழிந்தது இப்படி..,

"இதற்கான என் தேடலில்
எப்போது விடை கிடைக்கும் ...???"

எழுதியவர் : அகன் (22-Dec-12, 9:59 am)
பார்வை : 145

மேலே