சுகம் தரும் முதுமை!
பழுத்துநிற்கும் கனியைத்தான்
பழம்என்று சுவைக்கின்றோம்!
அழுத்தமான சொல்லைத்தான்
அருத்தமுடன் பார்க்கின்றோம் !
விழுதுவிட்ட மர்ரத்தடிதான்
விரித்துவைக்கும் பெருநிழலை !
அழகியல்தான் முதுமைஎன்போம்
அதனைபோற்றி வாழ்த்திடுவோம்!
முதுமைசுமக்கும் அன்பைத்தான்
முற்றமெல்லாம் விதைப்போமே !
செதுக்கிவைத்த சிற்பமென்றே
சிறப்பைஎல்லாம் கொடுப்போமே!
புதுக்கிவைக்கும் புதுமைக்கும்
புதுப்பாதை போடுவோமே !
முதுமைஇங்கு முன்னுரையாம்
முழுமைபெற்ற மனிதராவோம்!