காலம்

ஊழிக்காற்றில் சிக்கி
சிதைந்து போன
உன்னதமது சற்றே
கிடைத்த சுவாசத்தால்
மீண்டும் உயிர்க்கிறது
மீண்டும் ஒரு
நம்பிக்கையோடு
காலத்தின் நுழைவாயிலில்
தன் தளிர் நடையோடு
சந்திக்க போகும்
துன்பத்தை சிந்திக்காமல்
சற்றேனும் இன்புற்று
இருப்போமே...!!!