நான் யார் ?

நான் யார் ?

என்னை பற்றி எனக்கே தெரியாத போது
நீ என்னை புரிந்து கொள்ளவில்லை என்று
நான் நினைப்பது கொஞ்சம் வேடிக்கையான
ஒன்று தான் ..............

நீ என்னை புரிந்து கொண்டாலும் சரி
இல்லை பிரிந்து சென்றாலும் சரி

நான் உன்னை வெறுக்க மாட்டேன்


உனக்கு எதிரிகள் இருக்க கூடாது என்று
நான் நினைப்பேன் ...........

என் அர்த்தம் இல்லாத அன்பு
உனக்கு எதிரகிவிடுமோ என்று
பயத்தில் துடித்தேன்

கண்ணுக்குள் உன்னை வைத்தேன்
கண்ணை நான் இழந்தாலும்
உன்னை மறக்காமல் இருக்க
என் நினைவுக்கு சொல்லி வைத்தேன்

நகமும் சதையும் போல
உயிரும் உடலும் போல
நீயும் நானும் இருக்க நினைத்தேன்


உன்னுடன் இருக்கும் ஆசையில்
என்னிடம் விட்டு
உன்னிடம் வந்தேன்

உன்னிடம் வந்த பிறகுதான்
என் நிலை அறிந்தேன்

நான் யார் ?

நான் நான் தான்
நீ நீ தான் .............

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (22-Dec-12, 4:59 pm)
சேர்த்தது : jgmagesh
பார்வை : 1711

மேலே