வெட்டியெறியத்தான்...................

.
சமயத்தின் பெயரால்
சாதி படைத்தாய்
இழிசாதி என்றே...
இனம் வகுத்தாய்....
தீண்டாமை....தீ..
கொண்டு
உன் முற்றத்தில்
யாகம் வளர்த்தாய்………….
......................................................
ஊரெல்லையில்
ஒதுக்கப் பட்டவனின்
அழுக்கையும் தீட்டையும்
உன் முகத்தில்
தேய்த்து செல்லும்
ஊருக்குள் நுழையும்
ஆறும்....
...........................................................
தூண்டிலிடுபவன் மேலுன்
தீண்டாமை...............
ஆற்றுநீரில்
உந்தன் பெண்களின்
பாதங்களை
சுவைத்துக் கொண்டிருக்கும்
கவிச்சென்று ..நீ
ஒதுக்கிய மீனும்
......................................................................
உன் வீட்டு
பூசையறையில்
பூசப்பட்டிருக்கும்
சாந்து குழைத்தவனின்
பாத ரேகைகள்....
..............................................................
என் வீட்டுக்குழந்தை
சப்பிய மடுவிலிருந்து
உனக்காகவும்
கறக்கப் படுகின்றன
பசுவின் பாலும்...
................................................................
களங்கம் கொண்ட
உன்
கட்டுக் கதைகளை
வெட்டியெறியத்தான்
கூர் தீட்டி நிற்கும்
பகுத்தறிவு கேள்விகள்
ஏன்.. ?எதற்கு... ?எப்படி..?
என்று............

எழுதியவர் : sindha (23-Dec-12, 2:41 pm)
பார்வை : 136

சிறந்த கவிதைகள்

மேலே