பொம்முக்குட்டி
பொம்முக்குட்டி
பளிச்சிடும் பண்டிகைநாள்
வீதியெங்கும் வெளிச்சமுற
அப்பாவின் வரவுக்காய்
அசையாமல் காத்திருந்தாள்
அழகு பொம்முக்குட்டி
பக்கத்துவீட்டின் பலகாரவாசம்
பசியை பிடுங்கித்தின்ன
ஆசைபூத்து பார்த்திருந்தாள்
அப்பொழுதும் வரவில்லை,,,
பற்றவைத்த அடுப்பினிலே
பாத்திரம் வேகிறது,,
பசிக்கொண்ட இவர்களின்
வெறும்வயிற்றினை போல்
ஏற்றிவைத்த ஹரிக்கேன் விளக்கும்
அணைந்திடுமோ என்பதை போல்
அதையே உற்று உற்றுப்பார்க்கிறாள்
அரை மயக்கப் பசியினிலே
அறையன்னா கூலிக்கு
அன்றாடம் உழைக்கின்ற
அப்பனவன் கொடுத்துவைத்த
ஐந்து காசு பொம்மைகளை
ஆசை தீர தழுவிப்பார்த்து
கனவுகளில் பூத்திருந்தாள்
வெட்டி வைத்த வாழையிலை
வெறுமனே விரித்திருக்க
தொட்டுவிட சோறுமில்லே
காத்துப்பட்டு கருகிப்போச்சு
அப்பனவன் வருவானோ
ஆசை தீர அணைப்பானோ
மாத்திக்கொள்ள புது உடுப்பும்
மத்தாப்புச் சக்கரமும்
பகர பகர பலகாரமும்
மருகுச்சம்பா நெல்லிச்சோறும்
மணமணக்க கோழிக்கறியும்
ஆக்கித்தர அம்மா இருந்தும்
ஆசையின்னும் மாறவில்லே
அப்பனின்னும் காணவில்லே
அனுசரன்,,,,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை