இழந்தவை

இழந்தவை எல்லாம் பெற்றுவிடும்
ஆற்றல் என்னிடம் இல்லை
சொந்த ஊர் எனும் சொர்க்கம் விட்டு
மாற்றான் ஊரில் அகதியாய் நான்
என் மதியை நினைத்து
நானே நொந்து கொண்டேன்

அருகில் இருக்கும் பொது
அருமை தெரியவில்லை
தொலைவில் இருக்கும் பொது
தொலைந்தது என் மனம்
என் எல்லாக் கேள்விகளும்
எதிரொலித்து அடங்குகின்றன
பதில்களின்றி நான் இழந்தவை

அதிகாலை நேரம் அருமையான பக்தி மணம்
அழகுமலர்களின் மாலையில் நறுமண வாசம்
காலை 7 மணி முதலே அம்மாவின் புலம்பல்
பள்ளிப் பருவத்தில் பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிந்த நாட்கள்

அம்மன்கோயில் தேர்த்திருவிழா
இளசுகளை சீண்டும் வாலிபர்கள்
782 இலக்கம் கொண்ட ஒரே ஒரு
அரசு பேருந்து
இரவுத் திருவிழா உறக்கமில்லா இரவுகள்

நெற்பயிர் வாசம்
நண்பனின் நேசம்
அம்மா தந்த சில்லறை குத்திகள்
தாவணி அணிந்துவரும் குமரிகள்

ஊருக்கு பயந்த படபட காதல்.
இலை மறையான காமம்
எதிர் வீட்டிலிருக்கும் சாந்தி
புன்னகைக்கும் அவளின் கண்கள்
நாம் நம் பெயர் கிறுக்கிய
அந்த உயர்ந்த ஆலமரம்

படுத்துறங்கிய புல்வெளி
விட்டுச்சென்ற உறவுகள்
அடுத்த ஊருக்கு மணக்கும்
அம்மாவின் கை பக்குவம்

பள்ளிக்கு போன பிள்ளை ,
பசியோட வருவான்னு,
எரியாத அடுப்பில் ஊதி ஊதி,
சமைத்து வைக்கும் அம்மா

பழைய கஞ்சிக்கு பச்சை மிளகாயும்
வெங்காயம் வைத்து காலையில் பருகிய நாட்கள்
துள்ளி குதித்தபடி கேணிக்குள் கரணம் போடும்
சிறிவர் பட்டாளம்

தள்ளாடித் தள்ளாடித்
தேடுகின்றேன்
தொலைந்து போன
பழைய நினைவுகளை

எழுதியவர் : (24-Dec-12, 12:19 am)
பார்வை : 252

மேலே