அண்ணன் ஜெ..வின் நினைவுக் கவிதைகள் சமர்ப்பணம் ..3
எச்சரிக்கை
தோழர்களே !
உங்கள் இதயப் பாறையைத் தகர்க்கவல்ல
ஈர வெடி குண்டுகள்
என் இரு விழிக் கிடங்கில்
புதைந்திருக்கின்றன
ஏக்கத்தின் கரங்களில்
அவை சிக்கி விடாத வாறு
புன்னகைக் காவல் போட்டு வையுங்கள்
இல்லை எனில்
அந்தக் கண்ணீர் வெடிகளால்
புதிய 'ஹிரோஷிமா ' க்கள் உருவாகும்
ஜாக்கிரதை !
---அன்பளிப்பு ---
ஆ .ஜெகன்