அண்ணன் ஜெ..வின் நினைவுக் கவிதைகள் சமர்ப்பணம் ..4
அந்த நேரங்கள்
நள்ளிரவில் மல்லிகையின் தூது --என (து )
உள்ளம் அலைக்கின்ற போது
மூடனைப் போல நான் ஆடுவேன் --மலர்க்
காடெனக் கவிதைகள் பாடுவேன் !
பனியோடு குளிர்வந்து கொஞ்சும் --சுகப்
பரவசத்தில் உயிர் கெஞ்சும்
பித்தனைப் போல நான் ஆடுவேன் --எழில்
முத்தெனக் காவியம் பாடுவேன் !
ஆடையில் லாதவெண் ணிலவு --முகில்
மேடையில் நடனமிட் டுலவும்
புவிமன்ன னாகவே மாறுவேன் --தமிழ்க்
கவிரதந் தன்னிலே ஏறுவேன் !
நெஞ்சிலே நீதரும் ஏக்கம் --தினம்
நீள்கையில் வாராது தூக்கம்
புனல் கொண்ட விழியோடு வாடுவேன் --துயர்க்
கனல் கொண்ட கவிதைகள் பாடுவேன் !
---அன்பளிப்பு ---
ஆ .ஜெகன்