சத்தியப் பாதையில்

வார்த்தை ஜாலங்கள்
துடிக்கும் கற்பனைகள்
வாகனமேறி
கவித்துவம் கைப்பற்ற
துடிக்கும் தருணம் !

சோம்பல் சங்கிலிகளை
அறுத்து எறிந்து
உங்களை விடுவிக்கும் வேளையில்
புது யுகமாய் தருணம்!

பொறுமை சிறையில்
பூட்டி வைத்து
பூமியின் மடியில்
ஆழமாக
புன்னகை பூக்கிறது
புதுக் கதிரும் செந்நிறம் வீசிக்
கீதமிசைக்கும் தருணம் !

நிஜங்களை
தரிசனம் செய்ய
மயக்கப் பிரதேசத்தில்
பொய் போதை சிறையில்
அடைத்து வைத்திருந்தனர்
முன்னோர்கள் தருணம் !

பாரதி வீரன்
நம்மை வெளிக் கொணர்ந்த பின்னும்
மீண்டும் சிறைகளுக்கே
பயணிக்கும் தருணம் !

இனி வேண்டாம்
உழைப்பவர்களும்
உண்மையின் உறைவிடங்கள்
செல்லும் தருணம் !

சரித்திர நதியில்
புதுப் பயணம் பாய
புதுமைகள் வெடிக்க
எழுந்து வரும்
சாதனைகள்
புதுப் பொலிவுடன் ..!
வீழ்ந்துவிடாமல்
சத்தியப் பாதையில்
நாமாக !

எழுதியவர் : செயா ரெத்தினம் (25-Dec-12, 3:14 am)
பார்வை : 84

மேலே