நரிகள் பரிகளாயின
நரிகள் எல்லாம்
ஓடின
காட்டுக்குள்ளே !
சூழ்ச்சிக்காரர்கள் எல்லாம்
ஓயாமல்
நாட்டையே
காடாக்கி விட்டன ..!
ஆதிக்க ஊளையிட்டுத்
தங்களை
அம்பலப்படுத்திக் கொண்டன !
அன்றாடம்
ஊளையிடும்
சூழ்ச்சி நரிகள்
மந்திரங்களால்
பரிகளாயின ..!
சுயநல இருட்டில்
நாட்டையே
காடாக்கி விட்டன
பதவித் தேனின்
ஆசையினால் ..!