கடி ஜோக்ஸ் -சில..

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...


டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!


""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''


ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!


போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி and ஈகரை

எழுதியவர் : abiruban (24-Dec-12, 9:40 am)
பார்வை : 1041

மேலே