அழிவல்ல ஆரம்பம்????

துள்ளி விளையாடி கொண்டிருந்த
கடல் அலைகள் சுனாமியாய் மாறி
நம்மை சிந்தித்து பார்க்க வைத்தது
அழிவல்ல ஓர் ஆரம்பம்

காற்றின் பேச்சை கேட்டு
தலையசைத்து கொண்டிருந்த மரங்களெல்லாம்
கூண்டோடு அழித்த தானே புயல்
அழிவல்ல ஓர் ஆரம்பம் தான்

உள்ளே கொதித்து கொண்டு
வெளியே அழகாய் நடித்து கொண்டிருக்கும்
எரிமலைகள் வெடித்து சிதறியது
அழிவல்ல ஓர் ஆரம்பம் தான்

விளையும் நிலங்களை-விலை
நிலங்களாக்கி தொழிர்சலைகலாய் மாறுவதால்
இயற்கைக்கு இடமில்லாமல்
உணவுக்கு வழியில்லாமல் போகிறது
இது அழிவல்ல ஓர் ஆரம்பம்

பூமியும் நம்மிடம் பேச நினைக்கிறது
அதனால் தானோ அடிகடி ஆங்காங்கே
நிலநடுக்கம் வந்து போகிறது
இது அழிவல்ல ஓர் ஆரம்பம்

நிலத்தடி நீர் கடல் நீராய் மாறுகிறது
குடிபதற்கு நீர் இல்லாமல்- ஓர்
எதிர்காலம் வரபோகிறது
இது அழிவல்ல ஓர் ஆரம்பம்

உலக அழிவின் கடைசி நாட்கள்
வீசபோகும் சூரிய புயல்,
விழ போகும் எரிகற்கள்
உருகும் பனிமலைகள்
இவற்றையெல்லாம் பார்த்துகொண்டு
அலறிய ஓட்டங்களோடும்
கதறிய தொலைதூர கூட்டங்களோடும்
இயற்கைக்கு ஒட்டு மொத்தமாய்
இறையாகி போகும் நாட்களுக்காக
இவையெல்லாம்
அழிவல்ல ஓர் ஆரம்பம் தான்

எழுதியவர் : மணிமாறன் (24-Dec-12, 1:37 pm)
சேர்த்தது : drums mani
பார்வை : 148

மேலே