ஜீசசின் பிறப்பு எழுச்சி ஆகட்டும்

செந்நீரில் தோய்ந்து பிறந்த
ஜீசசின் பிறப்பு எழுச்சி ஆகட்டும்
வறுமையில் வாடிய மக்களுக்காக
எளிமையினால் எழுச்சி கொண்டு
வட்டிக்கடைக் காரனை
சவுக்கால் அடித்த
ஜீசசின் பிறப்பு எழுச்சி ஆகட்டும்

டெல்லி பேருந்தில்
காமுகர்களின் காம வெறிக்கு
முற்றுப்புள்ளி வைக்க
டெல்லியில் திரண்ட
இளஞனுக்கும் இளம் பெண்ணுக்கும்
செந்நீரில் தோய்ந்த ஜீசசின் பிறப்பு
எழுச்சி ஆகட்டும்

தர்மபுரியில்
சாதி வெறியர்களின்
சதிராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திட
சாதிவெறி கண்டு பொங்கிய
செந்நீரில் தோய்ந்த ஜீசசின் பிறப்பு
எழுச்சி ஆகட்டும்

ஆணாதிக்க வெறியால் அவதரித்த
விபச்சாரியை கல்லால் அடித்த போது
எவனொருவன் பாவம் செய்யவில்லையோ
அவன் இவள் மீது
கல்லால் அடிக்கட்டும் -என்று
நெஞ்சுரத்துடன் கூறிய
வீரனின் பிறப்பு எழுச்சி ஆகட்டும்

உன் தாயையும் தந்தையையும்
கணம் பண்ணுவாயாக
என்ற உயரிய கொள்கையை
உலகுக்கு அறிவித்த உத்தமனின் பிறப்பு
எழுச்சி ஆகட்டும்

துன்மார்க்கன் முன் நீதிமான் தள்ளாடுவது
கலங்கிப் போன கிணற்றுக்கும்
கெட்டுப்போன ஒப்பாகும் சுனைக்கும் ஒப்பாகும் -என்று சொல்லி
அநீதிக்கு எதிராய் குரல் கொடுத்த
ஜீசசின் பிறப்பு எழுச்சி ஆகட்டும்

உங்கள் பார்வையில்
ஜீசஸ் தேவமைந்தன்
என் பார்வையில் ஜீசஸ்
ஒரு மாபெரும் போராளி

மக்களே!
குறைத்தபட்சம் அநீதியைக்கண்டு
கொதித்தெழுவதுதான்
ஜீசசின் பிறப்புக்கு
நாம் தரும் காணிக்கை

ஜீசசின் பிறப்பு எழுச்சி ஆகட்டும்

எழுதியவர் : porchezhian (24-Dec-12, 11:09 pm)
பார்வை : 155

மேலே