குறிக்கோள் !

குறிக்கோள் இது ஒன்றுதான்
உன் மூலதனம்

முயற்சி இது நீ எடுத்து வைக்கும்
முதல் படி

முன்னேற்றம் உன்னை தொடர்ந்து
வரும் உன் நிழல்

சம்பாதிக்கும் வரை அல்ல உன் வயது
சாதிக்கும் போது உயரும் நிலை

பணத்தை மட்டுமே நேசிக்கும் உலகம்
மனதை நேசிப்பது மிக அரிது

இறைவனால் கொடுக்கப்பட்டது வாழ்க்கை
சாதிக்கும் எண்ணம்தான் நமது வேட்கை

தூரம் அதிகமில்லை எட்டிவிடு
உன் குறிக்கோளை ..............

ஸ்ரீவை.காதர்

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (24-Dec-12, 10:55 pm)
பார்வை : 1675

மேலே