காதல் உனக்கில்லையோ!
காதல் கைகூடவில்லை
கண்ணீரோடு அமர்ந்திருந்தேன்
கடற்கரையினிலே!
துடைக்க நீ அருகில் இல்லை!
துன்பத்தில் நானிருந்தேன்!
என் காதலின் ஆழம் அறிந்த
கடல்காற்றுவந்து துடைக்கிறது
என் கண்ணீரை!
காற்றுகொண்ட காதல்கூட
கண்ணி உனக்கில்லையோ!